Avadi: 3 கோடியே 72 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்!

ஆவடி தொகுதியில் 3 கோடியே 72 லட்சத்தில் மேம்பாட்டு பணிகளைத் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர்  தொடங்கி வைத்தார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று வண்ணமாக, ஆவடி தொகுதிக்குட்பட்ட,1. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பள்ளியில் 3 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் அடிக்கல் நாட்டியும் பணிகளை 92 லட்சம் ரூபாய் மதிப்பில், சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்துவக்கி வைத்தார்.

2.திருநின்றவூர் நகராட்சியில் பல்வேறு இடங்களில்  தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் 15வது CFC திட்ட நிதியிலிருந்து புதிய சிமெண்ட் மற்றும் தார்  சாலைகள் அமைக்கும் பணியைச் சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்  தொடங்கி வைத்தார்.

3. நடுக்குத்தகை, கருணாகர சேரி ஆகிய ஊராட்சிகளில் ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

4.திருவேற்காடு நகராட்சியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மற்றும் சாலை பணிகளைத் துவக்கி வைத்தார்.

ஆவடி தொகுதி மேம்பாட்டிற்காக மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அனைத்து பணிகளையும் சிறப்பாகச் செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் அவர்களுக்குப் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர்  அருள், ஆவடி மேயர் உதயகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேஜே ரமேஷ், சண் பிரகாஷ், பகுதி செயலாளர் பேபி சேகர் மற்றும் ராஜேந்தர் நாகராஜ்,  தேசிங்கு ,கந்தன், கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *