சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – ஜாஸ்மின் பவோலினி அபார வெற்றி

Advertisements

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் , இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இவருடன், ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மெடோவா மோதினர். இதில், இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் பவோலினி 6-3, 6-7 (2-7), 6-3 என்ற செட்களில் வெற்றி வாகை சூடினார். மேலும், அவர் இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை எதிர்கொள்ள உள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் கேப்ரிலா-எரின் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இப்போட்டியில் துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய கேப்ரிலா, எரின் இணை, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில்  அலெக்சாண்ட்ரா பனோவா,குவோ ஹான்யு இணையை வீழ்த்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *