
சீனப் போர் விமானங்கள் தங்கள் இராணுவ விமானத்தைத் தாக்க முற்பட்டதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜப்பானின் ஒக்கினாவா தீவுக்கருகே அந்நாட்டு இராணுவ விமானம் சென்றபோது சீனப் போர் விமானங்களின் ராடார் தொடர்புக்குள் அது சென்றுள்ளது.
இந்த நிகழ்வு தங்கள் விமானத்தைத் தாக்கச் சீனப் போர் விமானம் முயன்றதையே காட்டுவதாக ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி குற்றஞ்சாட்டியுள்ளார். இது மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் இதற்குப் பதிலளித்துள்ள சீன அரசு தங்கள் போர் ஒத்திகையின்போது ஜப்பான் விமானம் இடையூறு செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.


