ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றிய சிறப்பு விவாதம் ..!

மக்களவையில் இன்று பகல்காம் பயங்கரவாதிகளின் தாக்குதல், அதற்குப் பதிலடி கொடுத்த ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கை ஆகியன பற்றிச் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் நாள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருபதுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அது பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அந்தக் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்துவிட்டது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் இன்று பகல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய படுகொலை குறித்தும், அதற்கு இந்திய ராணுவம் ஆப்பரேசன் சிந்தூர் என்னும் பெயரில் பதிலடி கொடுத்தது குறித்தும் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *