விஜய் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை ராஜா..அதிர வைக்கும் சர்வே ரிப்போர்ட்.!

Advertisements
தமிழக தேர்தல் களத்தில் விஜய் கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர விஜய் கூட வெற்றி பெற மாட்டார் என்கிற சர்வே ரிப்போர்ட் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும்படியாக இருக்கிறது . வருகிற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்திவரும் பெண் நிறுவனம் ஒரு சர்வே எடுத்தது.
சர்வே முடிவில் மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவு இல்லை பல தொகுதிகளில் அதிருப்தி நிலவுகிறது எனவே திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் வேகமாக களமிறங்கி பணியாற்ற வேண்டும்  என பெண் நிறுவனம் மு க ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது
இதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார் . அந்த ஆய்வில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால்தான் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி உற்சாகமாக பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்
இதேபோல் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா ஒரு சர்வே நடத்தி இருக்கிறார் அந்த சர்வே முடிவில் 40 முதல் 45 சதவீதம் வரை தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என நடிகர் விஜய்க்கு தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது . ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல ஆதவ் அர்ஜுனா பொய் சொன்னதாக சொல்கிறார்கள்
தமிழ்நாடு முழுவதும் பத்து முதல் 15 சதவீத வாக்குகள் மட்டுமே நடிகர் விஜய் கட்சிக்கு கிடைக்கும் என்கிறார்கள்  . இது மட்டுமல்ல தென் தமிழகத்தில் நடிகர் விஜய் போட்டியிட்டால் நிச்சயமாக தோல்வியை தழுவுவார் மேலும் வட தமிழகத்தில் அவர் போட்டியிடும் பொழுது திமுக அதிமுக நேரடியாக அவருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினாலும் நடிகர் விஜய் தோல்வியை தழுவுவார் என்று  சர்வே தகவல் தெரிவித்துள்ளது
இத்தகைய தகவல்களால் நடிகர் விஜய் தற்பொழுது மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக சொல்கிறார்கள் . எனவே கூட்டணி மூலமாகத்தான் வெற்றி பெற முடியும் என்கிற முடிவுக்கு நடிகர் விஜய் வந்ததாக சொல்கிறார்கள் இதன் நிமித்தமாகத்தான் காங்கிரஸ் கட்சியையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு நடிகர் விஜய் வந்ததாக சொல்கிறார்கள்
அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்ற நிலையில் தற்பொழுது டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்கும் பணியில் நடிகர் விஜய் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள் . எனவே நடிகர் விஜய் வருகிற தேர்தலில் நிச்சயமாக தனித்துப் போட்டியிட மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தற்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள் . இதேபோல் நாம் தமிழர் சீமான் கட்சியும் குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெறுவதோடு ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முடியாது என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *