ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியை சந்திக்க இரு குழந்தைகள் வந்தனர். அப்போது அவருக்குக் குழந்தைகள் அவரை வரவேற்பதற்காக வந்ததாகத் தெரிவித்தனர். அவர்களை அன்போடு அருகே அழைத்த பிரதமர் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.
பிரதமர் மோடி குழந்தைகளுடன் விளையாடிய விலை மதிப்பற்ற நேரங்கள் மகிழ்ச்சியான தருணங்கள். பிரதமர் மோடிக்கு நல்ல வரவேற்பு அளித்துக் குழந்தைகள் அன்பு மழை பொழிந்தனர்.
இரண்டு குழந்தைகளுக்குக் காசு வைத்து ட்ரிக்காக எப்படி விளையாடுவது என்று செய்து காட்டினார். அந்த வீடியோவைப் பாஜக அலுவலகம் வெளியிட்டது. தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.