Advertisements

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையே இந்திய திருநாடு மிஞ்சுகிறது என்கிற உலகளாவிய சர்வே தகவல் ஒன்று புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . இது பற்றிய செய்தியை தற்போது காணலாம்
அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டாண்ட்லி என்ற நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து ஆண்டுதோறும் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளியிடும் ஆய்வறிக்கை என்பது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான சர்வே ஆகும் . அந்த வகையில் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடுகளை மிஞ்சும் அளவுக்கு இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ள தகவல்தான் இப்பொழுது புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச ஆய்வறிக்கையில் முதலாவதாக அமெரிக்கா பற்றி குறிப்பிட்டுள்ளது. அதாவது தங்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்காக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் சீனா உள்ளிட்டவை அதிக தொகை செலவிட்டு வருகிறது இருந்த போதிலும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது கொரோனா பெருந் தொற்று காலத்துக்கு பிறகு சர்வதேச பொருளாதாரம் என்பது முழுமையாக மீட்சி அடையவில்லை
அமெரிக்காவை பொறுத்த வரையில் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளது இதன் காரணமாக கடந்த ஏப்ரலில் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் சர்வை சந்தித்துள்ளது இது உலகம் முழுவதும்
மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது நடப்பு ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம்
வளர்ச்சி 1.5 சதவீதமாக இருக்கும்
வருகிற 2026 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதமாக குறையும் . இது மட்டுமல்ல அமெரிக்காவில் தற்போது பணவீக்கம் 3 சதவீதமாக இருக்கிறது மேலும் சட்ட விரோதமாக குடி இருக்கிறார்கள் என்று சொல்லி பல வெளிநாட்டினரை அமெரிக்கா வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது இதன் காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் இதனால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
இதே போல் ஐரோப்பாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் ஒரு சதவீதமாக இருக்கும் சீனாவின் வீட்டு வசதி துறை பெரும் சரி வை சந்தித்து வருகிறது எனவே அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 4.5 சதவீதமாக இருக்கும் வருகிற 2026 ஆம் ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி 4.2சதவீதமாக குறையும் . ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொருத்தவரையில் நடப்பாண்டில் ஒரு சதவீதமாக இருக்கும் அடுத்த ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி சைபர் புள்ளி ஐந்து சதவீதமாக குறையும்
இதேபோல் பிரேசில் மெக்சிகோ நாடுகளின் வளர்ச்சியும் தடைபட்டு வருகிறது அமெரிக்காவின் சில கொள்கை முடிவுகள் லத்தின் நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது . இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது அந்த நாட்டின் உள்நாட்டு சந்தை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும் வருகிற 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆறு புள்ளி நான்கு சதவீதமாக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அதாவது அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகி வரும் நிலையில் சீன தேசம் 4.5% வளர்ச்சி காணப்படும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் இந்திய நாடு தனது பொருளாதார வளர்ச்சியில் 6.4 சதவீதமாக அதிகரிக்கும் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியாக இந்தியர்களால் பார்க்கப்படுகிறது . இது பிரதமர் மோடி ஆட்சியில் நடந்த உலக வரலாறு என பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது கொண்டாட்டங்களை தெரிவிக்க காத்திருக்கிறார்கள் என்கிறது ஜெம் தொலைக்காட்சியின் இந்த சிறப்பு செய்தி
Advertisements
