நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், மகாத்மாகாந்தி பெயரை நீக்கிவிட்டு, வி.பி.ஜி.இராம்ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட மசோதாவை, பா.ஜ.க.அரசு தாக்கல் செய்துள்ளது கண்டனத்திற்கு உரியது என்றும் மதுரை திருநகரில், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.
மதுரை திருநகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்றத்தில், எதிர்கட்சியை சேர்ந்த 240 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடிக்கொண்ருக்கும் நிலையில், இரவோடு இரவாக, நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், மகாத்மாகாந்தி பெயரை நீக்கிவிட்டு, வி.பி.ஜி.இராம்ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட மசோதாவை, பா.ஜ.க.அரசு தாக்கல் செய்துள்ளது கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்தார். மேலும், செவிலியரின் போராட்டம் நியாயமான போராட்டம் என்றும், அவர்களின் கோரிக்கையை, சுகாதாரத்துறை அமைச்சர் முதலமைச்சரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.

