China : பட்டாசு உற்பத்தி ஆலையில் திடீரென தீ விபத்து.. 21 பேர் பலி.!

சீனாவில்  உள்ள முக்கிய பட்டாசு உற்பத்தி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழத்துள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் முக்கிய பட்டாசு உற்பத்தி மையம் உள்ளது. இதில், சீனாவில் விற்கப்படும் பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை கட்டிடங்கள் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த மீட்புபடையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 21 பேர் சம்பவ இடத்தலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 61 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக விபத்து நடந்த பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள்  அப்புறப்படுத்தப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *