Today’s rasipalan:இன்றைய ராசிபலன்:27.07.2024

Advertisements

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். பணிகளை மேற்கொள்ளும்போது சில அசௌகரியங்கள் ஏற்ப்படும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.குடும்ப வளச்சிக்காகச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் சிறிய முயற்சி கூடப் பெரிய வெற்றியைத் தரும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் வங்கி சேமிப்பு உயரும் வகையில் பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் இருக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். அதிக பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தள்ளிப் போட வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். அதிக தேவையற்ற செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்குஉகந்த நாளாக இருக்காது. உங்களிடம் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். மேலும், மேலதிகாரியிடம் சில விரும்பத் தகாத சூழ்நிலை உண்டாகும். துணையுடன் வெளிப்படையாகப் பேசுவது நல்லது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை, வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவும் லாபமும் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் அணைத்து வகையிலும் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இருவரிடையே நல்லுறவு காணப்படும். மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியில் திருப்தி காணப்படாது. மேலும், சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.துணையுடனான புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பொறுப்புகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களுடனான உறவில் சிக்கல்கள் ஏற்படும். துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். நிதிநிலைமையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்குசிறப்பான நாளாக இருக்கிறது. , உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் பணிகளைக் குறித்தநேரத்தில் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் நேர்மறை எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் எதிலும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். மேலும், சக பணியாளர்களுடன் கவனமாகப் பழக வேண்டும். துணையுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. , நிதி நிலைமை சீராக இருக்காது. ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு திருப்தியான நாளாக இருக்காது. அனைத்து செயல்களையும் கவனமாகச் செய்ய வேண்டும். பணியில் திருப்தி காணப்படாது. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்., பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் இருமல் பிரச்சினை ஏற்படலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *