
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், தனது அரசியல் வருகையை அறிவித்த முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்தை உடைத்து, ஒரு புதிய அரசியல் சக்தியாக அவர் உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் , விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து, மே 7-ம் தேதி பதவியேற்பு விழா நடைப்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது..மேலும் , விஜய்யின் அமைச்சரவையில் அதிகப்படியான இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மாற்றத்திற்கான அரசு” என்ற முழக்கத்துடன் அவர் தனது முதல் அமைச்சரவையை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் இந்த வெற்றியைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
பதவியேற்பு விழாவிற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் சென்னைக்கு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..



