ஹமாஸ் அமைப்பு சிறைபிடித்த பிணைக் கைதிகள் விடுவிப்பு..!

ஹமாஸ் அமைப்பு சிறைபிடித்த பிணைக் கைதிகளை ஒன்று சேர்த்து வருவதாகவும், திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைவரையும் விடுவிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து போர் நிறுத்தம் செய்வதற்கான உடன்பாடு டொனால்டு டிரம்பின் முன்னெடுப்பால் கையொப்பமாகியுள்ளது.

அதன்படி தாங்கள் சிறைபிடித்துள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவில் இருந்து தடுத்து வைத்துள்ள 1700 பேரையும் விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு சிறைபிடித்த பிணைக் கைதிகளை ஒன்று சேர்த்து வருவதாகவும், திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைவரையும் விடுவிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் இஸ்ரேல் அரசும் தாங்கள் சிறைவைத்துள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதால், இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கும் காசாவின் வடபகுதிக்குப் பாலஸ்தீனர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *