Assistant Director Shri: ரகசியங்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர்!

Advertisements

“இயக்குனர் ஷங்கர்” ஒரு கலைஞரை தன் குழுவில் பயணிக்க எப்படி தேர்வு செய்வார் தெரியுமா? இதோ அவரின் முன்னாள் உதவி இயக்குனர் “ஶ்ரீ” பகிர்ந்து கொண்ட ரகசியங்கள்!

பிரம்மாண்டம் என்கிற சொல் எங்கெங்கெல்லாம் கேட்கப்படுகிறதோ அங்கு நமக்கு தோன்றும் பெயர் ஷங்கர் தான். ஆம், ஒரு படத்தை எப்படி கொடுக்க வேண்டும், எந்த அளவுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக அது இருக்க வேண்டும், பணம் கொடுக்கும் ரசிகர்களுக்கு முழு மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் கையாள்வார்.

இப்படி தன் படங்களை ஆரம்ப நாட்களில் இருந்து தந்து வந்த ஷங்கரின் யுக்தி பற்றி அவரிடம் உதவி இயக்குனராக இரண்டு படங்களில் பணியாற்றி, தற்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக உள்ள ஶ்ரீ அவர்கள் ஒரு நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் அவர்களுடன் தன் அனுபவங்களையும், பல அரிய தகவல்களையும் பகிர்ந்து இருந்தார்.

அதில், ஒருவர் இயக்குனர் ஷங்கர் அவர்களின் குழுவில் சேர விரும்பினால், அவர்களின் முழு திறனும் பயோடேட்டாவில் இருக்க வேண்டுமாம். மேலும், அதில் இருப்பதை வைத்து அவர் ஒரு நேர்காணல் நடத்துவாராம். அதுவும் கூட நமது பயோடேட்டா தேர்வானால் மட்டுமே. மேலும், குறிப்பாக யாருடைய சிபாரிசு மூலம் வந்தாலும், அவர்களின் திறன் அறிந்து மட்டுமே பணிகளை கொடுப்பாராம்.

அப்படி, ஒவ்வொரு துறைக்கும் ஒரு பெட்டி இருக்குமாம், அதில் இருக்கும் பயோ டேட்டாவை அவரே பார்பாராம். அதில், தேர்வானவர்களை அவர்களின் திறனுக்கு ஏற்ப வொர்க் அஸ்ஸைன் [ASSIGN] செய்துவிட்டு அதை பற்றி அவரே ஃபாலோ செய்வாராம். அதோடு, இது தான் அது தான் என்று இருக்க முடியாதாம். ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் ஷூட்டிங் செல்லும் முன்னரே தயார் நிலையில் இருக்க வேண்டுமாம்.

இது தான் பிரம்மாண்ட இயக்குனர ஷங்கர் அவர்களின் வெற்றிக்கான ரகசியம் என ஶ்ரீ கூறி உள்ளார். அதோடு, பாடல் பதிவு என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு சொல் மற்றும் ஒவ்வொரு இசையும் பகுதிகளையும் சரியான மற்றும் திருப்தி தரும் வகையில் வரும் வரை ஓகே சொல்ல மாட்டாராம். ஏதேனும் புதுமை ஒவ்வொன்றிலும் இருக்க வேண்டும் என நினைப்பார். இப்படி தான் ஒரு கலைஞர் இயக்குனர் ஷங்கரின் குழுவில் இணைய முடியும் என கூறியுள்ளார் ஶ்ரீ.

அப்படி அவரின் குழுவில் இருந்து தற்போது ஜொலித்து வரும் இயக்குநர்கள் சிலரை கூறலாம், அவர்களில் வசந்த பாலன், வெங்கடேஷ், பாலாஜி சக்திவேல், அறிவழகன், அட்லீ, நீலேஷ் கிருஷ்ணா போன்றவர்கள் அவரின் பட்டறையில் இருந்து வந்து தற்போது ஜொலித்து வருபவர்கள் ஆவர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *