வேளச்சேரியில் நிலத்தை அளந்து தராததால் உரிமையாளர் வேதனை..

சென்னை வேளச்சேரியில் நிலத்தை அளந்து தராமல் வட்டாட்சியர் இழுத்து அடிப்பதாகக் கூறி உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பத்மநாபன் மயிலாப்பூரைச் சேர்ந்த சீனிவாசர் என்பவரிடம் வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் 4600 சதுர அடி நிலத்தை விலைக்கு வாங்கி இருந்தார்.

தன்னுடைய பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து அந்த இடத்தில் குடிசை அமைத்து தங்கி இருந்தார். 2022ஆம் ஆண்டு அந்த இடத்திற்கு வந்த ஒரு சிலர் அங்கிருந்த காவலாளியை விரட்டிவிட்டு அதே குடிசையில் தங்கியுள்ளனர்.

இது குறித்துப் பத்மநாபன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளார்.

அந்த இடத்தை அளந்து தருமாறு வேளச்சேரி வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் அதைச் செய்யாமல் இழுத்தடித்து வருகிறார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த பத்மநாபன் தனது நிலத்தைத் தானே அளக்க முயன்றபோது அங்கிருந்தவர்கள் எதிர்த்துத் தகராறு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *