டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்கிளேவில் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்ப்பு..

Advertisements

கோவையில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்கிளேவில் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்றனர்.
கோவை சிங்காநல்லூரில் டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்கிளேவ் எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

அதன் இரண்டாம் நாள் அமர்வில் மாணவர்களின் தொழில்முனைவுச் சிந்தனையை ஊக்குவித்துச் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புதுமையான திட்டங்களைப் பாராட்டும் வகையில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது புதுமைத் திட்டங்கள் குறித்துப் பேசினர்.

தொடக்க விழாவில், எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்களின் கல்வி இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தும் சவால்கள் மற்றும் பயன்கள் குறித்துப் பேசினர்.

இதில், எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை, தொழில் முனைவோர் சரண் ஹெக்டே, மருத்துவர் ராஜா சபாபதி, ஜிபு எலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *