Advertisements

விருத்தாசலத்தில் தமிழ்நாடு வெல்டிங் கடை உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வெல்டிங் கடை உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு உயிர் மட்ட குழு உறுப்பினர் பாஸ்கர், மாநில துணை செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில்
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனை மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வெல்டிங் கடை உரிமையாளர்கள் சென்னையில் கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலைக்கு பேரணியாக வந்து மாலை அணிவிப்பது எனவும். சென்னையில் தலைமை சங்கத்திற்கு சொந்தமான இடம் வாங்கி அதில் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதற்காக நிதி திரட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது . இதில்மாநில செயலாளர் பாலாஜி, மாநில பொருளாளர் மோகன், நகர தலைவர் வெங்கடாபதி, நகர செயலாளர் ராமலிங்கம், நகர பொருளாளர் செல்வம், ராஜேஷ், சூசைமணி, இளங்கோ, மகேஷ், செந்தில், பிரபு உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்டிங் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்.
Advertisements

