Chennai: தூய்மைப் பணியாளர்கள் பத்தாவது நாளாகப் போராட்டம்!

சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களுடன் அரசு நடத்திய ஏழாம் கட்டப் பேச்சு தோல்வியில் முடிந்தது.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியைத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்துத் தூய்மைப் பணியாளர்கள் ஒருவாரக்காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிப்பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் அவர்கள் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் அமைச்சர் நேரு, சேகர்பாபு ஆகியோர் பேச்சு நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் இன்று ஏழாம் கட்டப் பேச்சு நடைபெற்றது.

இதில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சும் தோல்வியில் முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *