
முத்து மற்றும் மீனா, காதலித்தவருடன் சென்ற பவானியை கண்டுபிடித்தபிறகு, பரசு வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். அங்கு, பவானிக்காகப் பேசிக் காதலித்த பையனுடன் திருமணம் செய்யச் சம்மதிக்க வைக்கிறார்கள். பின்னர், அந்தப் பையனுடைய வீட்டிற்கும் சென்று, அவர்களையும் சமாதானம் செய்கிறார்கள். திருமணத்திற்காக அவர்களையும் சம்மதிக்க வைக்கிறார்கள்.
இதற்கிடையில், மலேஷியா மாமா பரசு வீட்டிற்கு செல்கிறார். அந்த நேரத்தில், முத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால், முத்து மற்றும் மலேஷியா மாமா ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
பின்னர், மனோஜ் கடைக்கு ஒருவர் வருகிறார். அவர் கடைக்குப் பொருள் வாங்க வந்தவர் என்று மனோஜ் கேட்கிறார். அதற்கு, “நான் வாங்க வரல, விக்க வந்திருக்கேன்” என்கிறார். “என்ன விக்கப் போறீங்க?” என்று மனோஜ் கேட்கிறார்.
