தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற மாநில அமைப்புப் பயிற்சி முகாமில் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
இதில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, 2026 சட்டமன்ற தேர்தலைத் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகளைக் கூறினார்.
இந்நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியப் பொறுப்பாளர் மினோன் அரவிந்த், பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழிசை, கோவைத் தெற்குச் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

