சர்வதேச ஸ்குவாஷ் போட்டி:தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன்

Advertisements

சென்னையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் எகிப்தின் ஆடம் ஹவாலை வீழ்த்தி தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் எச்.சி.எல். இந்தியச் சுற்றுப்பயணச் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார், எகிப்தின் ஆடம் ஹவாலுடன் மோதினார். போட்டியில் சிறப்பாக விளையாடிய  வேலவன் செந்தில்குமார் 3 – 1 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஆடம் ஹவாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *