தமிழ்நாட்டின் 17 நிறுவனங்கள் தேசிய கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன..

Advertisements

தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் நூறு இடங்களுக்குள் தமிழ்நாட்டின் 17 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதையும், அவற்றுள் ஆறு நிறுவனங்கள் மாநில அரசு நிறுவனங்கள் என்பதையும்  மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல் நூறு இடங்களுக்குள் தமிழ்நாட்டின் 17 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலிடத்தில் சென்னை ஐஐடியும், 29ஆவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகமும், 30ஆவது இடத்தில் திருச்சி என்ஐடியும் இடம்பெற்றுள்ளன.

61ஆவது இடத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும், 68ஆம் இடத்தில் சென்னைப் பல்கலைக்கழகமும், 73ஆம் இடத்தில் அழகப்பா பல்கலைக்கழகமும், 76ஆம் இடத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 88ஆவது இடத்தில் உள்ளது. இந்தத் தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *