திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் சாடல்

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை உழைப்பாளர் தினப் பூங்காவில் கூடிய தூய்மைப் பணியாளர்களின் மீது திமுக அரசு மீண்டும் அடக்குமுறையை ஏவி அவர்களைக் கைது செய்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் தரக்குறைவாக நடத்தியதோடு, இதுகுறித்துப் புகார் அளிக்கச் சென்றதால் கைது செய்துவிடுவதாகவும் என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு எதிராக எழும் போராட்டக் குரல்களைக் கண்டு திமுக அரசுக்கு அத்தனை பயமிருந்தால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டுப் போக வேண்டியது தானே? என்று வினவியுள்ளார்.

அதைவிட்டு விட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கு அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுதான் திமுகவின் சமூகநீதியின் இலட்சணமா? என்றும் நாகேந்திரன் வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *