சர்வதேச பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனைகள் சாம்பியன் ..!

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் இந்திய வீராங்கனைகள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது. இதில், பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி, 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காகோ ஒசாவா- மை தனாபே ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனர். இதில் திரிசா- காயத்ரி ஜோடிக்கு 17 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாகப் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *