திறமை வாய்ந்த இந்தியர்களால் பயனடைந்த அமெரிக்கா: எலான் மஸ்க்..!

Advertisements

திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கை மற்றும் தொழில்முனைவு குறித்து பேட்டியளித்துள்ளார். இதில்,அமெரிக்காவில் குடியேறிய திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது என்றும் இந்திய திறமையின் மிகப்பெரிய பயனாளியாக அமெரிக்கா இருந்துள்ளது என்றார்.  இதை தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்பது தனக்கு தெரியவில்லை என்று கூறினார்.  இதை யடுத்து, தனக்கு தெரிந்தவரை திறமைசாலிகளுக்கு எப்போதுமே பற்றாக்குறை இருந்து வருகிறது என்றும் அந்த வெற்றிடத்தை வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் நிரப்புவதாகத் தெரிவித்தார்.  மேலும், உலகில் உள்ள திறமைசாலிகளை கண்டறிந்து பயன்படுத்த விரும்புவதாகக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *