ஜிஎஸ்டி வரியில் பல புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படும் – மோடி உரை

சமீபத்தில் ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  இந்த மாற்றங்கள்  அனைத்தும்  அமல்படுத்தப்பட இருக்கும் நிலையில்,  இந்திய  பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என்றும் புதிய ஜிஎஸ்டியால் மக்களின் சேமிப்புகள்  பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர்  நம்பிக்கை தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி, தற்போது வரை 4 வகையாக பிரித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவின் வரி, சர்வதேச பொருளாதார தாக்கம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாது ஜிஎஸ்டி- ஐ எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல் கள் வணிகர்களிடம் இருந்தும் பொதுமக்களிடமிருந்தும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் 5, 12, 18, 28 என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி வசுல் , இனி வரும் காலங்களில் 5, 18 என இரண்டு வகையாக மட்டுமே வரி  வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு நாட்கள் மக்களிடையே  பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. இதனால் பல பொருட்களின் விலைகள் குறையும் என்றும்  இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் 5, 12, 18, 28 என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி, இனி வரும் காலங்களில் 5, 18 என இரண்டு வகையாக மட்டுமே வரி  வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த புதிய நடைமுறை  அமலுக்கு வர இருப்பதால் பல பொருட்களின் விலைகள் குறையும். இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி  நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில்  அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என்றும்  இந்த  புதிய ஜிஎஸ்டியால் மக்களின் சேமிப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் எனவும் , மக்கள்  விரும்பியதை வாங்கலாம் என்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடி கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் என்றும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *