பதவி விலகும்போது தர்மேந்திர பிரதான் சொன்னது என்ன தெரியுமா.?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றிய நிலையில் மத்திய கலi;வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தனை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கனிமொழி தலைமையிலான தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செய லாளர் டி.ராஜா, பாலிவுட் நடிகை ஹ_மா-குரேஷி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்திருக்கிறார். இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும், மத்திய அரசிற்கும், டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில், செய்தி தொடர்பாளர் சவுரவ்-தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர். இந்நிலையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கடந்த 10 நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்த்து மனம் கலங்கிப் போயுள்ளேன் என்றும், இந்தியாவின் இளைஞர் சக்தியே நாட்டின் உண்மையான பலம் என்றும் கடிதத்தில் தர்மேந்திரபிரதான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *