சும்மா இருந்தவனா நோட்டிவிட்டா சுப்பனும் சுப்ரீம் கோர்ட் போனவனாம். காட்டுல இருந்தவன் களத்துக்கு வந்தா கண்ணா பிண்ணாணு சேத்து எடுத்து அடிப்பாரம். அதுபோல இருக்கிறது இன்று முக அழகிரியின் மகள் கயல்விழி செய்த காரியம்.
முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவருக்கும், அவரது இரண்டாவது மனைவியான தயாளுஅம்மாள் அவர்களுக்கு பிறந்த மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான முக அழகிரிக்கு பிறந்த மகள் கயல்விழி, சென்னை அடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கி மேனேஜரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கயல்விழி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அடையாறில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் என்ஆர்ஐ கிளை மேலாளராக ஹர்ஷீன் சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தக் கட்டடத்தில் உள்ள லிப்டில் பழுது ஏற்பட்டுள்ளது.
லிப்ட் பழுதானதற்கு கயல்விழி அவர்கள் வங்கி மேலாளரை பளார் என்று அறைந்ததன் தொடக்கத்தை தற்போது சுருக்கமாகப் பார்க்கலாம். இதையடுத்து, லிப்ட் பழுது குறித்து கூறுவதற்காக கயல்விழியின் உதவியாளரை தொடர்பு கொள்ள வங்கி மேனேஜர் ஹர்ஷீன் சிங் முயற்சி செய்துள்ளார்.
போன் போட்டால் போன் எடுக்காமல் போண்டா தின்று கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை ஆனால், அவர் பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, ஹர்ஷீன் சிங் கயல்விழியைத் தொடர்பு கொண்டு லிப்ட் பிரச்சனை குறித்து முழு விளக்கத்தையும் கதை கதையாக கயல்விழியிடம் கதை கதைத்திருக்கிறார்.
இதையடுத்து, கயல்விழி வங்கி கிளைக்கு நேரடியாக வந்துள்ளார். அப்போது, மேனேஜரிடம் தனக்கு போன் செய்தது தொடர்பாக கயல்விழி சீறய சினத்தோடு கேள்வியை காட்டமாக எழுப்பியிருக்கிறார்.அப்போது, வங்கியின் மேனேஜர் தன்னுடைய இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு தனக்கு ஒன்றுமே தெரியான அப்பாவி போல் அமர்ந்தும் இருக்கிறார்.
இதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கயல்விழி மேனேஜரின் கன்னத்தில் ஓங்கி பளார் பளாருனு ஒரு அறை அறைந்திருக்கிறார்.
கயல்விழியின் கொடூர முகம் இந்த சம்பவத்தின் மூலம் அங்கிருந்த பார்த்தால் பளபளவென காட்டும். சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் அச்சு பதிந்திதாற் அப்பட்டமாக கயல்விழி வங்கி மேலாளரை ஒரு ஆண் என்றும் பாராமல் கண்ணத்தில் அறைந்த காட்சி பதிவாகியுள்ளது.
இதனால் கோபமடைந்த வங்கி மேலாளர் தன்னை அறைந்தவர் பெண் என்பதால் பாவம் பரிதாபம் என்ற சொல்லின் அடிப்படையில் அந்த பெண்ணிற்கு காட்டிவிட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து படமெடுத்த கதையையும் பார்த்துவிடலாம். இந்நிலையில், வங்கி மேனேஜரை தாக்கிய கயல்விழி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அந்த வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆண்பாவம் பொல்லாதது என்பதற்கேற்ப காரணமே அறியாமல் என்னை எதுக்கு அறைந்தீர்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் அப்பாவி வங்கி மேலாளருக்கு கயல்விழியை கைது செய்வதன் மூலம் வங்கி மேலாளார் ஆறுதல் அடைவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



