C. P. Radhakrishnan: அம்மாதான் காரணம்.. ஜார்கண்ட் ஆளுநர் பேச்சு!

Advertisements

பாரத பிரதமர் நிறைவேற்றி வரும் பல திட்டங்களுக்குச் சத்தி அம்மா தான் காரணம் என ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர்  சி. பி ராதாகிருஷ்ணன் பேசினார்.

வேலூர்  ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக்கோயில்  பீடாதிபதி சக்தி அம்மாவின் 48வது ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.விழாவில் சக்தி அம்மாவிற்குபாத பூஜை செய்யப்பட்டு மலர் அபிஷேகம்செய்யப்பட்டது.

இதில் முன்னாள் குடியரசு தலைவர்ராம்நாத் கோவிந்த், ஜார்கண்ட் மாநிலத்தின்ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
ஆகியோர் பங்கேற்று, மலர் அபிஷேகத்தில் கலந்து கொண்டு சத்தி அம்மாவுக்குமலர் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டனர்.சக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு யானைகள் புடை சூழ ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி. பி ராதாகிருஷ்ணன்,

வேலூரில்  நாராயணி பீடத்தில்  உள்ள சத்தி அம்மா அரசு செய்கின்ற ஒவ்வொரு திட்டங்களையும் தன்னுடைய பீடத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்குச் செய்து வருகிறார்.குறிப்பாககல்வி, சுகாதாரம், பசுமை திட்டம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களைச் சத்தி அம்மா செய்து வருகிறார்.சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படவும் சக்தி  அம்மா நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறார்.

குஜராத் முதல்வராக நரேந்திர  மோடி இருந்தபோது வேலூர் நாராயணி பீடத்தில் உள்ள சக்தி அம்மாவைச் சந்தித்து பேசினார்.அப்போது சக்தி அம்மா செய்துவரும் நலத்திட்டங்களை கேட்டு வியந்தார்.ஒரு குருவே செய்யும்போது நாம் ஏன் செய்யக் கூடாது என்று நினைத்தார்.அதன் காரணமாகத்தான்பிரதமர் மோடி தன்னுடைய ஆட்சி காலத்தில் பல்வேறு நல திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.

இதற்குக் காரணம் சக்தி அம்மாதான்.சக்தி அம்மா செய்து வரும் வெளிப்பாடுதான் இப்போது பிரதமராக மோடி வந்தபிறகு  இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறாரெனச் சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சக்தி அம்மா தன்னுடைய பீடத்தின் சார்பாக ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

நாராயனணி பீடத்தில் அனுதினமும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி சுகாதாரம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறார்.உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும் ஆண்டுதோறும் நிதி உதவிகளைச் சக்தி அம்மா வழங்கி வருகிறார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பதுதொடர்பாகச் சக்தி  அம்மா பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.

வேலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளைநட்டு பசுமையாக மாற்றி உள்ளார்.சமுதாயத்திற்கு பல சேவைகளைச் சக்தி அம்மா செய்து வருவது பாராட்டுக்குரியது என ராம்நாத் கோவிந்த் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *