Serial Actor Arjun Arumugam: நீண்ட நாள் காதலியைக் கரம்பிடித்த சீரியல் நடிகர்!

Advertisements

நீண்ட நாள் காதலியைக் கரம்பிடித்த சீரியல் நடிகர்!

சீரியல் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம் தன்னுடைய குடும்பத்தினர் சம்மதத்துடன், நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா மற்றும் ப்ரீத்தி சஞ்சீவ் நடிப்பில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்  ‘பொன்னி சி/ஓ ராணி’ தொடர். இந்தச் சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம்.

சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், பல வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், நேற்று சென்னையில் இவருடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

இவருடைய திருமணத்தில், நெருங்கிய குடும்ப உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி… ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களைக் குவித்து வருகிறது.

அர்ஜுன் ஆறுமுகம், ஏற்கனவே பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் தாயம்மா, உள்ளிட்ட தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய  திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அர்ஜுன், புதிய தொடக்கம். அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு கணத்திலும் உன்னை நேசிப்பேன் என்று உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *