BJP MP Brijendra Singh Joins Congress: பா.ஜ.க.விலிருந்து விலகியது ஏன்? அரியானா எம்.பி.பரபரப்பு பேட்டி!

Advertisements

பாஜகவிலிருந்து விலகிய அரியானா மாநில எம்பி பிரிஜேந்திர சிங் காங்கிரஸில் இணைந்தார். விலகியது ஏன் என்பது குறித்து அவர் பேட்டி அளித்தார்.

நாடாளுமன்றமக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலைப் பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் 34 பேர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட 195 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஐஏஎஸ் அதிகாரி:

இந்நிலையில், அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் நேற்று தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸில் இணைந்தார். இவரது தந்தை சவுத்ரி பிரேந்தர் சிங் கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிப் பாஜகவில் சேர்ந்தார்.

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவரது மகன் பிரிஜேந்திர சிங் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் இவர் பாஜக., வில் இருந்த நேற்று விலகிக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

எம்பி பதவியில்இருந்தும் விலகல்:

இதுகுறித்து பிரிஜேந்திர சிங் தனது எக்ஸ் சமூக வலை தளத்தில் கூறியிருப்பதாவது:-

நெருக்கடியான அரசியல் காரணங்களுக்காக நான் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன். எனக்கு ஹிசார்  எம்.பி. பதவியிலிருந்தும் நான் ராஜினாமா செய்துள்ளேன். இந்த வாய்ப்பளித்த ஹிசார் தொகுதி மக்களுக்கு நன்றி.பொது சேவையிலும், அரசியலிலும் எனது தீர்மானம் தொடரும்.

அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகள் காரணமாக நான் பாஜகவை விட்டு விலகிக் காங்கிரஸில் இணைந்துள்ளேன். விவசாயிகள் போராட்டம், அக்னி வீரர்கள் திட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் உட்பட பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.காங்கிரஸ் குடும்பத்தில் இணைவது எனக்கு மகிழ்ச்சி.இவ்வாறு பிரிஜேந்திர சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் போட்டி?

டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் பிரிஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக், தீபக் பபாரியா ஆகியோர் உடனிருந்தனர். வரும் மக்களவை தொகுதியில்  ஹிசார் தொகுதியிலிருந்து இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாமெனக் காங்கிரஸ் மேலிட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *