உழவர்களின் நன்றியை நெகிழ்ச்சியுடன் ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்!

பொங்கல் திருநாளையொட்டிச் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தமிழ்நாடு உழவர் சங்கங்களின் பேராளர்கள் சந்தித்து அவருக்கு விளைபொருட்களைப் பரிசளித்தனர்.

பொங்கல் திருநாளையொட்டிச் சென்னையில் உள்ள பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தமிழ்நாடு உழவர் சங்கங்களின் பேராளர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் கலந்துகொண்டு முதலமைச்சருக்குப் பொங்கல் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

ஒவ்வொருவரும் தங்கள் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள், பொன்னி அரிசி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து முதலமைச்சருக்குப் பரிசளித்தனர். அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் உழவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *