Bullet Baba: புல்லட்டை வழிபடும் கிராம மக்கள்!

Advertisements

புல்லட்டை வழிபடும் கிராம மக்கள்! ஆனால் அதில் ஆச்சரியம் ஏராளம்!

ஒரு கிராமத்தில் மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு புல்லட் பைக்கை கடவுளாக வணங்குகிறார்கள் எனச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் அப்படியொரு இடம் இருக்கிறது. அங்கு ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய புல்லட் பைக்கை மக்கள் கடவுளாக வழி பட்டு வருகின்றனர்.

1991ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஓம் சிங் ரத்தோர் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பாலி மாவட்டத்தின் சோட்டிலா என்ற கிராமத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவர் மிக வேகமாகச் சென்றால் அவரால் பைக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் ரோட்டில் செல்லும்போதே நிலை தடுமாறினார்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவர் யோசிப்பதற்குள் பைக் நேராக ஒரு மரத்தில் சென்று மோதியது. அதில் ஓம் சிங் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக் அங்கிருந்த கிணற்றடியில் விழுந்து கிடந்தது. அதன் பின் அங்கு வந்த போலீசார் ஓம் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


ஓம் சிங் ஓட்டி வந்த பைக்கை போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு சென்றனர். மறுநாள் அங்கு நடந்தது தான் பெரும் அதிசயம். மறுநாள் காலையில் போலீசார் போலீஸ் ஸ்டேஷனிற்கு வெளியே வந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஓம் சிங் விபத்தில் சிக்கிய பைக்கை காணவில்லை.

போலீசார் ஊருக்குள் சென்று விசாரிக்கலாமெனச் சென்றபோது விபத்து நடந்த அதே இடத்தில் குறிப்பிட்ட அந்தப் பைக் கிடந்தது. அதைப் பார்த்ததும் போலீசாருக்கு பெரும் ஆச்சரியம். அது எப்படி சாத்தியம் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட பைக் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தது எனத் தெரியாமல் போலீசார் முழித்தனர். இருந்தாலும் அந்தக் கிராமத்தில் உள்ள சிலர் செய்தவேலையாக இருக்கும் என அவர்கள் கருதினர்.

பின்னர் அந்தப் பைக்கை மீண்டும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்துவிட்டு பிறகு அந்தப் பைக்கில் இருந்த பெட்ரோலை முழுவதும் வெளியேற்றி விட்டனர். புல்லட் பைக் அதிக எடை கொண்டது என்பதால் அதை உருட்டிக்கொண்டே மீண்டும் செல்ல முடியாது. அதனால் போலீசார் அவ்வாறு செய்தனர்.


அப்படி இருந்தும் மறுநாளும் அங்கிருந்த பைக் காணாமல் போய்விட்டது. அதைப் பார்த்துப் போலீசார் அதிர்ச்சியடைந்துவிட்டனர். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் போலீசார் முழித்தனர். மீண்டும் அந்த வண்டி விபத்து நடந்த இடத்திலேயே தான் கிடைக்கிறது. மீண்டும் எடுத்துக்கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் விடுகின்றனர். இந்த முறையும் காணாமல் போகிறது. விபத்து நடந்த இடத்தில் கிடைக்கிறது.

போலீசார் யாரோ வேண்டுமென்றே செய்யும் வேலையென நினைக்கின்றனர். பின் பைக்கை எடுத்துப் போலீஸ் ஸ்டேஷன் கொண்வு வந்து இந்த முறை சங்கிலியால் பைக்கை பூட்டிவிடுகின்றனர். ஆனால் இந்த முறையும் பூட்டுடன் காணாமல் போய் விபத்து நடத்த இடத்திலேயே கிடைக்கிறது.

இந்தச் செய்தி ஊரில் பலர் பலர் ஓம்சிங்கின் ஆவிதான் இந்தப் பைக்கில் இருக்கிறது என என் அந்தப் பைக்கை அங்கேயே வைத்துச் சிறிய கோவில் ஒன்றை கட்டி விடுகின்றனர். அன்று முதல் இன்றுவரை அந்தப் பைக் தான் அந்தக் கோவிலின் கடவுளாக இருந்து வருகிறது. அந்தப் பகுதி வழியாக யார் சென்றாலும் ஒரு நிமிடம் தங்கள் வாகனத்தை நிறுத்தி அந்தப் பைக்கை பார்த்துக் கும்பிட்டு விட்டுச் செல்கின்றனர்.

அப்படி அந்தப் பைக்கை குடும்பிடாமல் சொன்றவர்கள் பலர் விபத்தில் சிக்கியதாகவும் அந்தக் கிராம மக்கள் கூறுகின்றனர். இன்றும் ஒரு புல்லட் மக்கள் கடவுளாக வணங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இருக்கிறது.மேலும் சில ஓட்டுநர்கள் அந்த இடத்தில் சிறிய மது பாட்டில்களையும் வழங்குகிறார்கள்.  சன்னதியில் பிரார்த்தனை செய்யாமல் தங்களது வாகனத்தை நிறுத்தாத ஒருவருக்கு அவரது பயணத்தில் ஆபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

பக்தர்கள் ‘திலகம்’ குறியைப் பூசி, வாகனத்தில் சிவப்பு நூலைக் கட்டுகிறார்கள். ஓம் பன்னா என்ற பெயரில் உள்ளூர் மக்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகிறார்கள்.ஓம் பன்னாவின் மரணத்திற்கு காரணமான மரம் வளையல்கள், தாவணி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரசாதங்களில் ஊதுபத்தி, மலர்கள், தேங்காய், மதுபானம், சிவப்பு நூல் மற்றும் இனிப்புகள் ஆகியவை அடங்கும். சன்னதியில் ஒரு நித்திய விளக்கு வைக்கப்பட்டுள்ளது.


போலீசார் போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு வந்த பைக் எப்படி மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கே செல்கிறது? அந்தப் பைக்கை வணங்காமல் செல்பவர்கள் எப்படி விபத்தில் சிக்குகின்றனர்? எல்லாமே தீராத மர்மம் தான்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *