Tirusulam – Meenambakkam Trains: ரயில்கள் ஓட தொடங்கின!

ரயில் தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை அடுத்து குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் விரிசல் ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே விரிசல் ஏற்பட்ட ரயில் தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திரிசூலம் – மீனம்பாக்கம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தாம்பரம் கடற்கரை மார்க்கமாக செல்லும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒன்றரை மணி நேர சீரமைப்பு பணிக்கு பிறகு தற்காலிகமாக கிளாம்ப் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து போக்குவரத்து சீரானதை தொடர்ந்து தாம்பரம் – கடற்கரை மார்க்கமாக ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

ரயில் தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை அடுத்து குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் விரிசல் ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *