Jonestown Massacre: வழிபாடு எனும் போர்வையில் நடந்த படுகொலை!

Advertisements

வழிபாடு எனும் போர்வையில் நடந்த ஜோன்ஸ் டவுன் படுகொலை.

ஜிம் ஜோன்ஸ் என்பவர்  தான் இந்தப் படுகொலைக்கு முழு முதற் காரணம்.  வழிபாடு எனும் போர்வையில் மக்களைத் தவறாக வழி நடத்தி அதுவே ஒரு கட்டத்தில் வெறியாக மாறிக் கொலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது.  இவர் முன்னின்று கொடூரமான கொலையை அரங்கேற்றியதால் இப்படுகொலையானது ஜோன்ஸ் படுகொலை என்றே அழைக்கப்படுகிறது.

ஜோன்ஸ்டவுன் படுகொலை” நவம்பர் 18, 1978 இல் நிகழ்ந்தது,   ஜிம் ஜோன்ஸ் (1931-78)  வழிபாடுகள் பற்றியும்  அவற்றை முறைகள் பற்றியும்  கூறி  உறுப்பினர்களைச் சேர்த்தார். அவரது பேச்சில் கட்டுண்டு ஒரு சில பிரிவினர் அவர் சொல்வதை தெய்வ வாக்காக அப்படியே நம்பி அவர்கள் சொல்வதை அடிமைகள்போலச் செய்து வந்தனர்.அதே ஜோன்ஸ் தான் கொடுமையாகத் தங்களைக் கொல்ல போகிறான் என்று ஆரம்பத்தில் அறியவில்லை. பாவம்  அப்பாவி மக்கள்.

தென் அமெரிக்க நாடான கயானாவில் உள்ள ஜோன்ஸ்டவுன் குடியிருப்பு என்று அழைக்கப்படும் இடத்தில் இது நடந்தது. ஜோன்ஸ் 1950 களில் இந்தியானாவில் ஒரு வழிபாட்டுத் தலத்தை நிறுவி மக்கள் வழிபாடு செய்யச் சில கோட்பாடுகளை விதித்து அவரைப் பின்  தொடரச்   செய்யுமாறு  தலையாட்டிப் பொம்மைகள்போல மாற்றி  வைத்திருந்தார். அது மக்கள் சபையென அழைக்கப்பட்டது.

பின்னர் 1960 களில் தனது சபையைக் கலிபோர்னியாவிற்கு மாற்றினார். இவரைப் பற்றிய பேச்சு  செய்தியாக வர ஆரம்பித்தது. இவருக்கு எதிரான கருத்துக்களும் வரத் தொடங்கியது.இருப்பினும் அவற்றையெல்லாம் சமாளித்து 1970 களில், எதிர்மறையான ஊடகங்களின் அவப் பெயரைத்தாண்டி   சக்திவாய்ந்த, அனைவரையும் கட்டுப்படுத்தும் சாமியார் என்ற போர்வையில்   1,000 அவரைப் பின்பற்ற அப்படியே  கயானீஸ் காட்டிற்குச் சென்றார்,

அங்குத் தமது பக்தர்களிடம் அவர்கள்கற்பனை செய்த்தௌ போலவே ஒரு புதிய  சமூகத்தை அமைப்பதாக உறுதியளித்தார்.  அதே சமயம் நிறைய  குற்றங்களும் வைக்கப்பட்டன.அப்போதுநவம்பர் 18, 1978 இல், அமெரிக்கப் பிரதிநிதி லியோ ரியான், ஜோன்ஸ் மீது தவறாக அதிகார துஷ்பிரயோகம்செய்ததாகக்கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜோன்ஸ்டவுனுக்குச் சென்றிருந்தார், லியோ ரியான்  மற்றும் அவருடைய பிரதிநிதிகள் குழுவின் நான்கு உறுப்பினர்களும்  கொலை செய்யப்பட்டார்கள்.

இதனைத் தொடர்து  அரசாங்கம் நடவடிக்கை  ஜோன்ஸை விசாரிக்கவும், அவர்மேல் நடவடிக்கை எடுக்கவும் பலத்த ஆயுதங்களுடன்  காவலர் படை  அங்குள்ள ஜோன்ஸ் ஆதரவாளர்களை விசாரிக்கவும், ஜோன்ஸை சிறைபிடிக்கவும் சென்றபோது ஜோன்ஸ் தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தான்.

எந்த மக்கள் ஜோன்ஸை வழிகாட்டி என்று நம்பினார்களோ அவர்களை ம், ஈவு, இரக்கம் இல்லாமல் சயனைடு, விஷம் கலந்த  பஞ்சை சாப்பிடும்படி கட்டளையிட்டார்.  பயந்து சாப்பிட்டவர்கள் செத்து மடிந்தனர். சயனைடு, மயக்க மருந்துகள் மற்றும் தூள் பழச்சாறு ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையைக் குழந்தைகளின் தொண்டையில் விடுவதற்கு பெற்றோர்களும் செவிலியர்களும் சிரிஞ்ச்களைப் பயன்படுத்தியதால், இளைய உறுப்பினர்கள் முதலில் இறந்தனர்.பின்னர் பெரியவர்கள் வரிசையாக நஞ்சு கலந்த கஷாயத்தைக் குடிக்க, ஆயுதமேந்திய காவலர்கள் அப்பகுதியைச் சூழ்ந்தனர். இந்தக் கொடூரமான நிகழ்வுதான் “கூல்-எய்ட் குடிப்பது” என்று அழைக்கப்பட்டது.

அடுத்த நாள் கயானிய அதிகாரிகள் ஜோன்ஸ்டவுன் வளாகத்திற்கு வந்தபோது, நூற்றுக்கணக்கான இறந்த உடல்கள் கம்பளத்தின் மேல் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உயிர் பிரியும்போது துடிக்கும் சூழலினால் பலர் ஒருவரையொருவர் கைகளால் சுற்றிக் கொண்டு இறந்து கிடந்தனர்.  ஜிம் ஜோன்ஸ், வயது 47, அவரும் ஒரு நாற்காலியில் இறந்த நிலையில் காணப்பட்டார், தலையில் ஒரு தோட்டா துளைத்த அடையாளம் இருந்தது. ஒரு வேளை அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

நவம்பர் 18, 1978 அன்று ஜோன்ஸ்டவுனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 909 பேர், அவர்களில் மூன்றில் ஒரு பங்குக் குழந்தைகள். அன்றைய தினம் ஒரு சிலர் காட்டுக்குள் தப்பிக்க முடிந்தது, அதே நேரத்தில் ஜோன்ஸின் பல மகன்கள் உட்பட குறைந்தது 50-க்கும் மேற்பட்டோர் மக்கள் கோயில் உறுப்பினர்கள் அந்த நேரத்தில் கயானாவின் மற்றொரு பகுதியில் இருந்தனர். மொத்தம் 33 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

“மரண நாடு’ என்று அழைக்கப்படும் நிகழ்வின் சோகமான கொடுமையான நிகழ்ச்சி. தனி ஒருவன் நிகழ்த்திய இச்சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.
.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *