Bulgaria: டிராக்டர்கள் உடன் விவசாயிகள் எதிர்ப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதலே உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பெருமளவில் குறைந்துள்ளது…

உக்ரைன் தானியங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை முடிவுக்குக் கொண்டுவருவதை எதிர்த்துப் பல்கேரியாவில் டிராக்டர்களை அணிவகுத்து நிற்கச் செய்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதலே உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பெருமளவில் குறைந்துள்ளது. நிலைமையைச் சமாளிக்க குறைந்த விலைக்குத் தங்கள் நாட்டு தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்தது.

இதனால் தங்கள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதிய ஐரோப்பிய யூனியன் உக்ரைனிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. இந்நிலையில், உக்ரைன் மீதான தடையைப் பல்கேரியா அரசு முடிவுக்குக் கொண்டுவந்ததால் அங்குள்ள விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சோபியா பகுதியில் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் உடன் கூடிய விவசாயிகள் அவற்றை அணிவகுக்க செய்து தாங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *