Puducherry: தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள்!

புதுவை சட்டசபை படிகட்டில் அமர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது…

புதுச்சேரி: புதுவை சட்டசபை இன்று காலைக் கூடியது. காலை 9 மணிக்குச் சட்டசபைக்கு வந்த பாஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டசபையின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார். 9.10 மணியளவில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபைக்கு வந்தார்.

அவரும் கல்யாண சுந்தரத்துக்கு ஆதரவாகப் படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாகக் குற்றம்சாட்டினார். 9.30 மணிக்குச் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்ட சபைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.களை சமரசம் செய்து, தனது அறைக்குக் கையோடு அழைத்துச்சென்றார்.

இதனால் எம்.எல்.ஏ.கள் தர்ணா ½ மணி நேரத்தில் முடிவடைந்தது. முன்னதாகக் கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, காலாப்பட்டு தொகுதி மக்களுக்குப் பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

வருவாய்த்துறை செயலரான கலெக்டரை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதில்லை. அவர் முதலமைச்சர் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார். எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளைக் கலெக்டர் செய்வதில்லையெனக் குற்றம்சாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *