Lady Police Sub-Inspector: திருமண வீட்டாரை தகாத வார்த்தைகளால் வசைபாடிய பெண் உதவி ஆய்வாளர்!

Advertisements

திருமணத்திற்கு வைத்த பேனரை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர்  திருமண வீட்டாரை  தகாத வார்த்தையில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல்ஆகி வருகிறது.மேலும் உதவி ஆய்வாளரைக் கண்டித்து மணக் கோலத்தில்   மணமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேஜா என்பவருக்கும் பட்டாபிராம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நாளைத் திருமணம் நடைபெருவதாக இருந்தது. எனவே மணமக்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாக அவர்களின் நண்பர்கள் ஆங்காகே பேனர் வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். அப்போது தினேஷ் தனது திருமணம் நாளைக் காலை முடிந்து விடும் என்றும், திருமணம் முடிந்தவுடன் பேனர்களை அகற்றி விடுவதாகவும் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் காவல்துறையினர் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால், திருமண வீட்டாருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஒருகட்டத்தில் மணமகன் தினேஷை காவல்துறையினர் வலுகட்டாயமாகக் காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.இதனால் மணப்பெண்ணும் காவல்துறையினரிடம் வாக்குவாததில் ஈடுபட்டர்.
சம்பவ இடத்தில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் வசந்தி திருமண வீட்டாரை பார்த்துத் தகாத வார்த்தைகளில் வசைபாடினார்.

இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே காவல்துறையினர் அராஜக போக்குடன் நடந்து கொண்டதாகக் கூறி, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி  வரவேற்பு நிகழ்ச்சியில் மணக் கோலத்தில்   மணமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *