Brutal Murder Of Child: மர்மமான முறையில் 7 வயது சிறுவன் பலி!

Advertisements

விளாத்திகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார்(வயது 7). சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அஸ்வின் குமார் காய்ச்சல் காரணமாகக் கடந்த 2 நாட்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பெற்றோர் வெளியில் சென்று விட வேம்பார் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அவரது  வீட்டில் அஸ்வின் குமார் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் தனியாக இருந்த அஸ்வின் குமார் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சூரங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்துக் கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி காய்ச்சல் காரணமாகப் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த 7 வயது சிறுவன் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *