வாக்கு சேகரிப்புடன் மக்கள் பணி..!

கோவில்பட்டி அடுத்த காமநாயக்கன்பட்டி கிராமத்தில், ரூபாய் 11-கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை, முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜீ  தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி கிராமத்தில் விண்ணரசி மருத்துவமனை தெருவில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11-லட்சத்து 25-ஆயிரம்  மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது.
இதன் தொடக்க விழாவில்,  சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜீ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *