
தினசரி சுபமுகூர்த்தங்களை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில், தை மாதத்தின் கடைசி முகூர்த்தம் காரணமாக, இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், 16.02.2025 மற்றும் 17.02.2025 ஆகிய நாட்களில் சுபமுகூர்த்தம் நடைபெறுவதால், பூக்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால், தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
மேலும், மல்லிகைப்பூ சீசன் முடிவுக்கு வந்ததால், மல்லிகை பூவின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால், மல்லிகைப்பூவின் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்கள் செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசைநல்லூர், ஆரக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, சேவக்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வருகின்றன.
