ஈரான் எண்ணெய் ஏற்றுமதி தடை – பிராந்தியத்தில் யாரும் விற்க முடியாது என எச்சரிக்கை!

நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
அதேவேளையில், அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் அந்த ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *