லஞ்சம் கொடுத்த வழக்கு.. – மௌனம் கலைத்த அதானி!

Advertisements

சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் ரீதியாகவும் புயலைக் கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள்குறித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட்ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார். இந்த விவகாரம்குறித்து மேடையில் பேசிய அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதானி க்ரீன் எனர்ஜியின் நடைமுறைகள்குறித்து அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.

இது போன்ற சவால்களை நாம் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு தாக்குதலும் நம்மை வலிமையாக்குகிறது, மேலும் ஒவ்வொரு தடையும் மிகவும் உறுதியான அதானி குழுமத்திற்கு ஒரு படியாக மாறும். அதானி குழுமத்தின் வெற்றிகள் இருந்தபோதிலும், அது எதிர்கொண்ட சவால்கள் இன்னும் பெரியவை, இந்தச் சவால்கள் நம்மை உடைக்கவில்லை.

மாறாக, அவை நம்மைக் கடினமாக்கியுள்ளன, மேலும் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும், நாம் மீண்டும் எழுவோம், முன்பை விட வலிமையாக, மேலும் வலிமையுடன் எழுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நமக்கு இவை அளித்துள்ளன என்று தெரிவித்தார். மேலும் 2023 இல் வெளிவந்த ஹிண்டன்பெர்க் அறிக்கையையும் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *