BJP Vs Congress: பாஜகாவை தோற்கடிக்க மகளிர் காங்கிரஸ் அழைப்பு!

Advertisements

மகளிர்க்கான நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாத பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி காங்கிரஸ் ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நீதி யாத்திரையில் ஏராளமான மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார், அவருடைய யாத்திரை வெற்றி பெற புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்ச காந்தி துணை தலைவிகள், ஜெயலட்சுமி, அஞ்சாலாட்சி, பொன்னி சுப்புராயன், நிஷா விஜயகுமாரி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்.பல மாநிலங்களில் உள்ள மகளிர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும் குமறல்களையும் ராகுல் காந்தி கேட்டு வருகிறார் மேலும் அவருடைய பயணம் சிறக்க மகளிர் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டனர்.

பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு அத்தியாவசியமான பொருட்களின் விளைவு உயர்வு சமையல் எரிவாயு சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்,

சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில் ஆண் பெண் பாலின பேதம் இல்லாமல் ஊதியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்,

சுகாதாரம், ஆரம்ப பிரசவ மையங்கள், அடிப்படை உள்கட்டமைப்பு உறுதி செய்யப் பட வேண்டும் மகளிர்க்கான உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலும் கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திட வேண்டும் ஆனால் இதையெல்லாம் பாஜக அரசு செய்யத் தவறி உள்ளது.

எனவே இந்த விவகாரங்களில் பாஜக அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் மகளிர்கள் மேம்பாடுகுறித்து இது போன்ற நடவடிக்கைகளில் இனிமேலும் பாஜக எந்த வேலையும் செய்யப் போவதில்லை எனவே வருகின்ற தேர்தலில் மகளிர்க்கான திட்டங்கள் மேம்பட அனைத்து தரப்பினரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பேடியின்போது புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் திரளாக உடன் இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *