Advertisements

உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியக் கடும் தாக்குதலில் மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள், டிரோன்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில், ஜபோரிஸ்சியா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா வடகொரியாவிடம் இருந்து புதிதாக ராணுவ உதவியை பெறுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தாக்குதலில் ரஷ்ய ராணுவப் படைகள் பயன்படுத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து வாங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதில், 15 வயது சிறுவன் உள்பட மொத்தம் 10 உயிரிழந்த நிலையில், 24 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisements





