இளைஞர்கள் நினைத்தால் உலகை நேர்மறையாக மாற்ற முடியும் : CM விஜய் பெருமிதம்.!

சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் இளைய சமுதாயத்திற்கு ஒரு எழுச்சியான வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்! புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது.

சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கனவுகள் நனவாகட்டும்! சாதனைகள் தொடரட்டும்!” என்று அவர் கூறியுள்ள வார்த்தைகள் தற்போது தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *