
தமிழக அரசின் பட்ஜெட் என்பது, என்ன படித்தார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது என்றும், இந்த பட்ஜெட் என்பது பூஜ்ஜியம் பட்ஜெட் என்றும் சிந்தாமணியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதமசிகாமணி விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி, விக்கிரவாண்டி அருகே சிந்தாமணியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம-சிகாமணி தலைமையி;ல், தி.மு.க.நி;ர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, முண்டியம்பாக்கத்திலிருந்து ஊர்வலமாக சென்று, சிந்தாமணியில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியை தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம-சிகாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழ் உள்ளவரை கருணாநிதியின் புகழ் ஓங்கியிருக்கும் என்றும், அதனை யாராலும் மாற்றிவிடமுடியாது என்றும் அவர் மறைந்து 8 ஆண்டுகளாகியும் கருணாநிதி தான் தலைப்பு செய்தியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிற்கே முதலமைச்சர் ச.ஜோசப்விஜய்தான் அவமானத்தை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் எனவும், தமிழக அரசின் பட்ஜெட் என்பது, என்ன படித்தார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது என்றும், இந்த பட்ஜெட் என்பது பூஜ்ஜியம் பட்ஜெட் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதமசிகாமணி விமர்சித்துள்ளார்.


