M. H. Jawahirullah: ஒரு தொகுதியை ஒதுக்கக் கோரிக்கை!

Advertisements

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மனித நேய மக்கள் கட்சியின்  நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு மற்றும் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள்குறித்து  கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொதுக்குழுவில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.பத்தாண்டு கால பாஜக ஆட்சி ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமாகவும் அரசாங்க விழும்பியங்களை சிதைக்கக்கூடிய கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

காந்தி பெற்று தந்த விடுதலை ஜனநாயகத்தை மீண்டும் பெற வேண்டும் வேண்டுமென்றால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும்.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற வேண்டும் எனக் கோரிக்கை,

40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மனிதநேய மக்கள் கட்சியினுடைய தொண்டர்கள் அரும்பாடு படுவார்கள்.2024 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பாக ஒரு தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்.

இதோடு திமுகவிடம் 49 நீண்டகால சிறைவாசிகளை   முன் விடுதலை அளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆளுநர் பத்து முஸ்லிம் கைதிகள் முன் விடுதலை உட்பட அனைத்து கோப்புகளையும் விரைவில் கையெழுத்திட வேண்டும்.

ஞான வாப்பி  பள்ளிவாசல் ஆக்கிரமிப்பு எனச் சதி திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக டெல்லியில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஆளுநர் பதவியே தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை*கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
39 தொகுதிகளில் திமுக எந்த தொகுதியைத் தந்தாலும் அதில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு மனிதநேய மக்கள் கட்சிக்கு உள்ளது.

10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன, சிறுபான்மையின மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.மோடி ஆட்சியில் பெரும்பாலான ஊடகங்கள் ஒன்றிய மோடி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தியா கூட்டணியைப் பார்த்துப் பிரதமர் மோடி அச்சமடைந்ததன் வெளிப்பாடுதான் பிரதமரின் நேற்றைய பாராளுமன்ற உரை.தேர்தலில் அரங்கேற்றப்படக்கூடிய பொய்களை எல்லாம் நீக்கி,  2024 இல் நேர்மையான ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றால்  இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டதா என்பதை வரக்கூடிய காலம் தான் சொல்லும்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பாஜகவின் அங்கமாகவே செயல்பட்டு வருகிறது.அதிமுக வின் ஆதரவோடு தான் மாநிலங்களவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயகத்தை நிலை நாட்ட விரும்பும் மக்கள் அதிமுக, பாஜகவிற்கு  வாக்களிக்கமாட்டார்கள், அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு அல்ல ஒன்று தான்.என அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *