
‘தலைவர் 170’ படத்தில் இணையும் அமிதாப்பச்சன்!
சென்னை: லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு ‘தலைவர் 170’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டு உள்ளது.இந்தப் படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். ‘தலைவர் 170’ படத்தின் படக்குழு குறித்த விவரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது.
அதன்படி நேற்றுமுன்தினம் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்தது.இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் இரண்டு நாயகிகளின் பெயர்களை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்நடிப்பில் உருவாக உள்ள‘தலைவர் 170 இடத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.



