பாஜகவின் அடிமை தான் பழனிசாமி – ரகுபதி பேச்சு.!

Advertisements

பாஜகவிற்கு பழனிசாமி கிடைக்க முடியுமே தவிர வேறு எந்த அடிமைகளும் தமிழ்நாட்டில் கிடைக்க மாட்டார்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி பாஜகவினரும், இந்து அமைப்பினரும் ஒரு மாபெரும் பிரச்னையை உருவாக்கி இருக்கிறார்கள் என கூறினார்.

தொடர்ந்து, அவர் தீபம் ஏற்ற அனுமதித்தால் தமிழ அரசு மீது என்ன குற்றசாட்டு வரும் என்பது உங்களுக்கு தெரியும் என்றார். எனவே, 2014 ஆம் ஆண்டு தீர்ப்பின் படி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். மேலும், அவர் அம்மா அம்மா என்று உச்சரிக்கிறார்களே அந்த அம்மையார் ஆட்சியில் இருந்தபோது வந்த தீர்ப்புதான் இது என தெரிவித்தார்.

ஆனால், இதை மறந்துவிட்டு புதிதாக ஒரு கதையை கட்டிவிட்டு போனால் மக்கள் நம்புவார்களா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பேசிய அவர், அவர்களுக்கு வேண்டுமென்றால் அடிமை பழனிசாமி கிடைக்க முடியுமே தவிர வேறு எந்த அடிமைகளும் தமிழ்நாட்டில் கிடைக்க மாட்டார்கள் என்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையே கிடையாது.

தமிழக அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய வேலை என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *