தனியார் பேருந்து நடத்துனர் பெண்களிடம் மிரட்டும் தோரணையில் அடாவடி பேச்சால் பரபரப்பு.!

Advertisements
செங்கத்தில் தனியார் பேருந்து நடத்துனர் பெண்களிடம் மிரட்டும் தோரணையில் அடாவடி பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 1500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இன்று செங்கத்திலிருந்து போளூர் செல்லும் லட்சுமி தனியார் பேருந்து வெகு நேரமாக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு இயக்கப்படாமல் இருந்ததால் பயணத்திற்காக பேருந்தில் ஏறிய பெரியவர்கள் ஊனமுற்றவர்கள் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதால் நடத்துனர் இடம் பேருந்தை இயக்குமாறு கூறியும் நடத்துனர் பயணிகளுக்கு என்ன ஆனாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தான் பேருந்தை இயக்குவோம் என  அடாவடியாக  மிரட்டும் தோரணையில் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் நேரத்தை மட்டும் கடைபிடிக்கும் தனியார் பேருந்துக்கள் அரசு விதித்த கட்டுப்பாட்டை மீறி அதிக பயணிகளை ஏற்றி செல்வது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெண்களிடம் அராஜக பேச்சில் ஈடுபட்ட நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *